இன்று கோவா அமைச்சரவை விரிவாக்கம் சனிக்கிழமை, 4 கிளர்ச்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சேர்க்கப்படலாம் என தகவல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவாவில் பாஜகவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இணைத்ததற்கு, கூட்டணியில் உள்ள கோவா பார்வர்டு கட்சித் தலைவரும் துணை முதல்வருமான விஜய் சர்தேசாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் மைனாரிட்டி பாஜக எரதக்கு இதுவரை ஆதரவளித்து வந்த தங்களை கழற்றி விடகோவா மாநில பாஜகவினர் முயற்சிப்பதாகவும் சர்தேசாய் குற்றம் சாட்டியுள்ளார்.


கோவாவில் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்த போது, 40 பேர் கொண்ட சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 15 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். கூட்டணியில் இருந்த கோவா பார்வர்ட் பார்ட்டியின் 3 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேச்சை எம்எல்ஏக்களின் தயவில் பாஜக ஆட்சி அமைத்தது. அப்போது காங்கிரசுக்கு 17 எம்எல்ஏக்கள் இருந்தும், கூடுதல் இடங்களைப் பெற்றிருந்த அக்கட்சியை முதலில் ஆட்சி அமைக்க அழைக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாரிக்கர் அமைச்சரவையில் கோவா பார்வர்டு கட்சியின் விஜய் சர்தேசாய் துணை முதல்வராக இருந்தார்.



மனோகர் பாரிக்கர் மறைவுக்குப் பின்னர், பிரமோத் சாவந்த் இப்போது முதல்வராக உள்ளார். இவருடைய அமைச்சரவையிலும் விஜய் சர்தேசாயுடன், பாஜகவின் மனோகர் அஜான்கர் ஆகிய இருவரும் துணை முதல்வர்களாக உள்ளனர்.காங்கிரசின் 2 எம்எல்ஏக்கள் ஏற்கனவே பாஜகவில் இணைந்ததால் அக்கட்சியின் பலம் 17 ஆக இருந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் நேற்று பாஜகவில் இணைந்து விட்டனர். இதனால் பாஜக 27 எம்எல்ஏக்களுடன் மெஜாரிட்டி பலம் பெற்றுள்ளது.


புதிதாக இணைந்துள்ள எம்எல்ஏக்களில் சிலருக்கு அமைச்சரவையில் இடமளிக்க பாஜக தலைமை முடிவு  செய்துள்ளது. இதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் தொடர்பாக கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் மூத்த தலைவர்களுடன் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆலோசனை நடத்தி உள்ளார். 



இதற்கிடையே காங்கிரஸ் எம்எல்ஏக்களை பிரித்து தங்களுடன் இணைத்துக்கொண்ட பாஜகவின் செயல் ஜனநாயக படுகொலை என காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது. ஆனால், எம்எல்ஏக்கள் 10 பேரும் விருப்பப்பட்டு, எந்தவித நிபந்தனையும் இன்றி இணைந்ததாக முதல்வர் கூறியுள்ளார். 


காங்கிரஸ் எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு மடங்கு எம்எல்ஏக்கள் பிரிந்து சென்று பாஜகவில் இணைந்திருப்பதால், அவர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அவர் கூறினார்.