Good News: COVID-19-ன் 617 வகைகளை Covaxin தடுப்பூசியால் அழிக்க முடியும்: US நிபுணர்கள்
கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசியான கோவாக்சின், கொடிய வைரஸின் 617 வகைகளை அழிக்கும் திறன் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்று செய்தி வந்துள்ளது.
புதுடெல்லி: கொரோனா வைரஸ் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துண்டே உள்ளது. இந்த சூழ்நிலையில், அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியமாகிறது.
இதற்கிடையில், கோவிட் -19 ஐ (COVID-19) எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசியான கோவாக்சின், கொடிய வைரஸின் 617 வகைகளை அழிக்கும் திறன் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்று செய்தி வந்துள்ளது.
617 வகையான கோவிட் வைரஸ்களை அழிக்கும் தடுப்பூசி
வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகரும் அமெரிக்காவின் உயர்மட்ட தொற்றுநோயியல் நிபுணருமான டாக்டர் அந்தோனி ஃபவுசி செவ்வாயன்று ஒரு மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த விஷயத்தில் நமக்கு ஒவ்வொரு நாளும் புதிய தரவுகள் கிடைக்கின்றன. ஆனால் புள்ளிவிவரங்களில் மிகவும் சமீபத்திய கோவிட் -19 நோயாளிகளின் இரத்த சீரம் மற்றும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்சின் தடுப்பூசி (Vaccine) வழங்கப்பட்டவர்கள் ஆய்வில் உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வில், கோவாக்சின் 617 வகையான கோவிட் வைரஸ்களை அழிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது." என்று கூறினார்.
ஃபவுசி மேலும் கூறுகையில், 'இந்தியாவில் நாம் காணும் சூழல் கடினமானதாக இருந்தாலும், இந்த தடுப்பூசி செயல்முறை ஒன்றுதான் அதற்கு எதிரான சரியான பதிலாகும். ஆகையால் அதை தொடர்ந்து விரைவாக செயல்படுத்த வேண்டும்" என்றார்.
தடுப்பூசி ஆன்டிபாடிகளை உருவாக்கும் பணியை செய்கிறது
கோவாக்சின் (Covaxin) தடுப்பூசி, நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு SARS-COV-2 கொரோனா வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குவதை கற்பிக்கிறது என்று நியூயார்க் டைம்ஸ் செவ்வாயன்று செய்தி வெளியிட்டது. இந்த ஆன்டிபாடிகள் வைரல் புரதங்கள் போன்ற ஸ்பைக் புரதங்களுடன் பிணைக்கப்பட்டு அதன் மேற்பரப்பில் பரவுகிறது.
இந்த தடுப்பூசி 78 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும்
பாரத் பயோடெக் உருவாக்கிய கோவாக்சின் தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, அவசரகால பயன்பாடுக்கு ஜனவரி 3 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளில் பின்னர் தடுப்பூசி 78 சதவீதம் வரை பயனுள்ளதாக இருந்தது தெரியவந்தது.
தொற்று முதல் இறப்பு வரை தரவு
நாடு முழுவதும் ஒரே நாளில் 3,60,960 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,79,97,267 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 3,293 பேர் இறந்தனர். புதன்கிழமை, கொரோனா தொற்றிலிருந்து 2,61,162 பேர் குணமடைந்துள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் பிள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் இதுவரை தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,01,187 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 29,78,709 ஐ எட்டியுள்ளது.
ALSO READ: இன்று முதல் 18+ அனைவரும் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR