புதுடெல்லி: நீட் 2021 தேர்வு முறையில் சிறிது மாற்றம் செய்யப்படுகிறது, இன்டர்னல் சாய்ஸை வழங்குகிறது தேசிய சோதனை நிறுவனம் என்.டி.ஏ... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) 2021 செப்டம்பர் 12 ஆம் தேதி நடத்தப்படும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்வு தேதிகளை அறிவித்த மறுநாள், ஒரு நாள் கழித்து, தேசிய சோதனை நிறுவனம் (National Testing Agency) விண்ணப்ப படிவங்களை வெளியிட்டுள்ளது.


விண்ணப்பம்-பதிவு-பதிவு செயல்முறை ntaneet.nic.in அல்லது nta.ac.in இல் தொடங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் கலந்துக் கொள்பவர்கள் ஆகஸ்ட் 6 வரை விண்ணப்பிக்கலாம்.


இந்த ஆண்டு, மாணவர்களின் வசதிக்காக என்.டி.ஏ தேர்வுகளில் உள் தேர்வை அனுமதித்துள்ளது. COVID-19 தொற்றுநோய் காரணமாக இது அனுமதிக்கப்படுகிறது.


Also Read | NEET 2021 Exam Registration: நீட் 2021 தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?


முன்னதாக மாநில மற்றும் மத்திய வாரியங்கள் தங்கள் பாடத்திட்டங்களைக் குறைத்திருந்தன, 30 சதவீதம், நுழைவுத் தேர்வுகளில் தளர்வு வழங்குவதாக அரசாங்கமும் அறிவித்திருந்தது. JEE மெயினிலும் உள் தேர்வுகள் இருந்தன, இப்போது NEET க்கும் அதே விருப்பம் உள்ளது.


இந்த ஆண்டு, நீட் (UG) 2021 இல் உள்ள ஒவ்வொரு பாடமும் இரண்டு பிரிவுகளைக் கொண்டிருக்கும். பிரிவு A இல் 35 கேள்விகள் இருக்கும், பிரிவு B க்கு 15 கேள்விகள் இருக்கும், இந்த 15 கேள்விகளில், தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் 10 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும்.


மொத்த கேள்விகளின் எண்ணிக்கையும், தேர்வுக்கான கால அவகாசமும் மாறாமல் அப்படியே இருக்கும். எல்லா கேள்விகளும் MCQ எனப்படும் multiple-choice questions வடிவத்திலேயே இருக்கும்.


நெகடிவ் மார்க்கிங்கும் உண்டு. அதாவது தவறான ஒரு பதிலுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். ஒரு கேள்விக்கு சரியான பதிலளித்தால், அதற்கு நான்கு மதிப்பெண்கள் கொடுக்கப்படும். 


நீட்-யுஜி 2021 மதிப்பெண்கள் மூலம், 83,075 எம்பிபிஎஸ், 26,949 பி.டி.எஸ், 52,720 ஆயுஷ் மற்றும் 525 பி.வி.எஸ்.சி மற்றும் ஏ.எச், எய்ம்ஸ் 1899 மற்றும் 249 ஜிப்மர் இடங்கள் வழங்கப்படும். கூடுதலாக, இந்த ஆண்டு முதல், நீட் நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஎஸ்சி லைஃப் சயின்சஸ் சேர்க்கைகளுக்கும் பயன்படுத்தப்படும்.


ALSO READ | NEET UG 2021 தேதி விரைவில் வெளியீடு, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தேர்வு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR