புது டெல்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு மீண்டும் ஏழை குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை 2021 ஏப்ரல் மாதம் அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஒரு நபருக்கு 5 கிலோ கூடுதல் உணவு தானியங்களை (அரிசி அல்லது கோதுமை) மே மற்றும் ஜூன் மாதங்களில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக வழங்கியது. இப்போது இந்த திட்டத்தை தீபாவளி வரை மத்திய அரசாங்கம் நீட்டித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் கூடுதலாக 5 கிலோ இலவச உணவு தானியங்களை, தீபாவளி வரைப் பெற்றுக்கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று (திங்கள்கிழமை) மாலை நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோது,"பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனா 2.0 (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) இன் விரிவாக்கத்தை அறிவித்தார். இதன்மூலம் 80 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.


என்ன நன்மைகள்?
இந்த திட்டத்தில் அறிவிக்கப்பட்ட கூடுதல் இலவச 5 கிலோ உணவு தானியங்கள் ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ரேஷன் கடைகளில் கிடைக்கும் உணவு தானியங்களுடன் கூடுதலாக பெறலாம். எப்படி என்றால், ஒரு குடும்பத்தின் ரேஷன் கார்டில் 4 உறுப்பினர்கள் இருந்தால், தற்போது ஒரு உறுப்பினருக்கு 5 கிலோ ரேஷன் (அரிசி / கோதுமை) கிடைக்கிறது என்றால், ஒரு மாதத்தில் அந்த ரேஷன் கார்தூக்கும் கிடைக்கும் மொத்த ரேஷன் 20 கிலோ ஆகும். ஒவ்வொரு உறுப்பினருக்கும் கூடுதலாக 5 கிலோ இலவச ரேஷன் (அரிசி / கோதுமை) கிடைக்கும். 


ALSO READ |  நாட்டு மக்களிடையே உரையாற்றினார் PM Modi: பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்!!


பிரதமர் கரிப் கல்யாண் யோஜனா என்றால் என்ன?
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனா (பி.எம்.ஜி.கே.ஒய்) உதவியுடன் நாட்டின் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.


பிரதமர் கரிப் கல்யாண் யோஜனாவின் கடைசி தேதி என்ன?
இப்போது மோடி அரசு பி.எம்.ஜி.கே.ஒய் (PMGKY Package) திட்டத்தை தீபாவளி 2021 வரை நீட்டித்துள்ளது.


இந்த PMGKY இன் நன்மை என்ன?
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் மத்திய அரசு ஒரு நபருக்கு 5 கிலோ கூடுதல் உணவு தானியங்களை (அரிசி / கோதுமை) இலவசமாக வழங்கியுள்ளது.


இந்த திட்டம் எப்பொழுது  செயல்படுத்தப்பட்டது?
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா காரணமாக நாடும் முழுவதும் பொதுமுடக்கம் அமல் செய்யப்பட நிலையில், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் பிரதமரின் கரிப் கல்யாண் தொகுப்பின் ஒரு பகுதியாக இருந்தது. ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனாவின் கீழ், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்கப்பட்டது.


ALSO READ |  ஏழை மக்களுக்கு 2 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கும்: மத்திய அரசு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR