ITR filing 2023: நாட்டில் வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்தவர்களின் வங்கிக் கணக்கில் திரும்பப் பணம் வரத் தொடங்கியுள்ளது. வரிக் கணக்குகளை திரும்ப அனுப்பும் செயல்முறை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. நீங்கள் இதுவரை உங்கள் ITR-ஐ தாக்கல் செய்யவில்லை என்றால், இந்த முக்கியமான வேலையைச் செய்ய இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி 31 ஜூலை 2023 ஆகும். இது மேலும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. எனவே உடனடியாக உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரும்பப் பணம் வங்கியில் செலுத்தும் பணி ஆரம்பமானது..
வருமான வரிக் கணக்கை வரி செலுத்துவோர் கணக்கில் செலுத்தும் பணியை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. ஐடிஆர் தாக்கல் செய்தவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரத் தொடங்கியுள்ளது. வருமான வரித்துறை தரப்பில் இருந்து, கடைசி தேதிக்காக காத்திருக்காமல், விரைவில் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும் என்று வரி செலுத்துவோருக்கு செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இதுவரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


இதுவரை 3 கோடிக்கும் அதிகமான ஐடிஆர் தாக்கல்..
வருமான வரித்துறையின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் மூலம், நாட்டில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமான ஐடிஆர் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் பகிரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட, 7 நாட்களுக்கு முன்னதாகவே வருமான வரித்துறை இந்த சாதனையை எட்டியுள்ளது. இந்த ஆண்டு 2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான 3 கோடிக்கும் அதிகமான ஐடிஆர்கள் ஜூலை 18, 2023 வரை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், கடந்த ஆண்டு இதே எண்ணிக்கையிலான ஐடிஆர் தாக்கல் 25 ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்டு இருந்தாகவும் ட்வீட் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும் படிக்க - Income Tax Refund: ஐடிஆர் ரீஃபண்ட் தாமதம் ஆகிறதா? இந்த விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்!


வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை வேண்டுகோள்..
வருமான வரித் துறையின் தரவுகளின்படி, ஜூலை 18, 2023 வரை, நாட்டில் 3.06 கோடி வரி செலுத்துவோர் தங்கள் ஐடிஆர் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இவற்றில், 2.81 கோடி ஐடிஆர்கள் மின் சரிபார்ப்பு செய்யப்பட்டு உள்ளன, அதாவது 91 சதவீத ஐடிஆர்களின் சரிபார்ப்பு செயல்முறை முடிந்துவிட்டது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் உற்சாகம் தொடரும் என எதிர்பார்க்கிறோம் என்றும், இதுவரை ஐடிஆர் தாக்கல் செய்யாத அனைவரும், கடைசி தேதிகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, இந்த முக்கியமான பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று வரிமான வரித்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.



ஜூலை 31க்குப் பிறகு அபராதம் விதிக்கப்படும்..
வருமான வரித் துறை நிர்ணயித்த காலக்கெடுவான ஜூலை 31க்குள் வரி செலுத்துபவர் தனது ஐடிஆர் தாக்கல் செய்ய முடியாவிட்டால், பின்னர் அபராதத்துடன் இந்த வேலையைச் செய்ய வேண்டும். இதன்படி, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை வரி செலுத்துவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். அதே வேளையில், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் ரூ.5,000 தாமதக் கட்டணமாக வசூலிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. எனவே 2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான ஐடிஆர் தாக்கல் செய்யாதவர்கள், கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்க வரி செலுத்துவோர் விரைவில் அதைச் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது.


மேலும் படிக்க - வரி செலுத்துவோர் கவனத்திற்கு! இந்த வருமானத்தை மறைத்தால் 10 லட்சம் அபராதம்!


ஐடிஆர் தாக்கல் செய்யும் போது இந்த ஆவணங்கள் தேவைப்படும்..
பான் கார்டு: ஐடிஆர் நிரப்புவதற்கு மட்டுமின்றி வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும் பான் கார்டு அவசியமான ஆவணமாகும். ஐடிஆர் நிரப்பும்போது அதை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.


ஆதார் அட்டை: ஆதாரில் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்கள் உள்ளன. அதன் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண்ணை உள்ளிட வேண்டும்.


படிவம் 16A: உங்கள் சம்பளத்தைத் தவிர மற்ற வருமான ஆதாரங்களுக்கு படிவம் 16A அவசியம், அதில் உங்கள் வருமானத்தின் முழு விவரங்கள் உள்ளன.


படிவம் 26AS: உங்கள் வருமானத்திலிருந்து கழிக்கப்பட்ட டிடிஎஸ் (TDS) மற்றும் செலுத்தப்பட்ட பணம் பற்றிய தகவல்களை வழங்குகிறது. வருமான வரித்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.


சம்பள சீட்டு: சம்பள சீட்டும் ஒரு முக்கியமான ஆவணம். அதில் நிரப்பப்பட வேண்டிய வருமானம், பயணப்படி போன்ற விவரங்கள் உள்ளன.


வீட்டுக் கடன்: உங்களிடம் வீட்டுக் கடன் இருந்தால், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது அதைப் பற்றிய முழுமையான தகவலைத் தருவது அவசியம்.


மேலும் படிக்க - ITR Facts: இறந்தவர்களும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்! ஏன் எப்படி?


புதிய அல்லது பழைய வரி முறையை சுயமாகத் தேர்ந்தெடுக்கலாம்..
ஐடிஆர் தாக்கல் செய்யும் போது, ​​இந்த முறை புதிய வரி விதிப்பு இயல்புநிலையில் வைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். பழைய வரி முறையின் கீழ் ஐடிஆர் தாக்கல் செய்ய விரும்பினால், அதை நீங்களே மாற்றிக் கொள்ள வேண்டும். புதிய வரி விதிப்பில் வரி விலக்கு பெற மிகக் குறைந்த விருப்பங்களே உள்ளன. இருப்பினும், 7 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு திறம்பட வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பழைய வரி விதிப்பில் வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படவில்லை. ஆனால் அங்கு பல்வேறு அரசு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமும் வேறு வழிகளிலும் வரிவிலக்கு பெறலாம்.


வீட்டிலிருந்தபடியே ஐடிஆர் தாக்கல் செய்யலாம்..
- வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலுக்கு (https://eportal.incometax.gov.in/) செல்லவும்.
- இதற்குப் பிறகு, முகப்புப் பக்கத்தில் உங்கள் பான் ஐடி மற்றும் கடவுச்சொல்லின் உதவியுடன் உள்நுழையவும்.
- டேஷ்போர்டில், இ-ஃபைல் > இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன் > 'ஃபைல் இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன்' என்பதைக் கிளிக் செய்யவும்.
- 2023-24 போன்ற மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுத்து, 'தொடரவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது ITR தாக்கல் செய்யும் முறையைத் தேர்ந்தெடுத்து ஆன்லைன் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது உங்கள் வரி வருமானம் மற்றும் டிடிஎஸ் கணக்கீட்டின்படி உங்கள் ஐடிஆர் படிவத்தைத் தேர்வு செய்யவும்.
- உங்களுக்குப் பொருந்தக்கூடிய ஐடிஆரைத் தேர்ந்தெடுத்த பிறகு, தொடக்க விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
- இப்போது சில கேள்விகள் திரையில் தோன்றும், உங்களுக்கு எது பொருந்தும், அதன் தேர்வுப்பெட்டியைக் குறிக்கவும் மற்றும் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஆவணங்களின்படி, வெவ்வேறு பிரிவுகளில் உங்கள் வருமானம் மற்றும் விலக்குகளின் விவரங்களை உள்ளிடவும்.
- படிவத்தில் உள்ளிடப்பட்ட எல்லா தரவையும் சரிபார்த்து, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
- வருமான வரி ரிட்டர்னை நீங்கள் சரிபார்த்தவுடன், படிவத்தை வெற்றிகரமாகச் சமர்ப்பித்தது பற்றிய தகவல் திரையில் தோன்றும்.
- பரிவர்த்தனை ஐடி மற்றும் ஒப்புகை எண் திரையில் காட்டப்படும். இதன் மூலம் எதிர்காலத்தில் உங்கள் ஐடிஆர் படிவத்தின் நிலையை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.
- இ-ஃபைலிங் போர்ட்டலில் உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி படிவத்தை வெற்றிகரமாக முடித்த தகவலை நீங்கள் பெறலாம்.


மேலும் படிக்க - Form 16 இல்லையா? நோ டென்ஷன்.. நீங்களும் ITR தாக்கல் செய்யலாம்.. இதோ செயல்முறை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ