புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா நிலைப்பாடு பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரக்கூடும். கிழக்கு லடாக் பகுதியில் சில பகுதிகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதில் தெளிவான விஷயம் என்னவென்றால், ஏப்ரல் மாதத்தில் சீனா எந்த எல்லைப் பகுதியில் இருந்ததோ அதே இடத்திற்கு பின்வாங்கிச் சென்றுவிடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒப்பந்தம் எங்கு எப்போது மேற்கொள்ளப்பட்டது?


நவம்பர் 6 ஆம் தேதி Chushul-இல் நடைபெற்ற 8 வது கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளும் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில்  நடந்த விவாதங்களின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 


பேச்சுவார்த்தையின் போது சீனா  முன்வைத்த சில விஷயங்களை இந்தியா பரிசீலித்தது. எல்லாம் சரியாக நடந்தால், சீன ராணுவம் மூன்று கட்டமாக பின்வாங்கி ஏப்ரல் மாதம் இருந்த நிலைகளுக்குச் செல்லும்.  முதல் கட்டமாக டாங்கிகள் மற்றும் கவச ரயில்கள் திரும்பி அனுப்பப்படும். இரண்டாவது கட்டத்தில், வீரர்கள் மூன்று நாட்களில் inger area என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து விலகிச் செல்வார்கள். இறுதி கட்டமாக சீன ராணுவத்தினர் யில் வீரர்கள் LACஇல் இருந்து விலகுவார்கள்.  


சீனாவின் உறுதிமொழியை நம்ப முடியுமா?  


நவம்பர் 6 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சகத்தின் (MEA) இணைச் செயலாளர் நவீன் ஸ்ரீவாஸ்தவா மற்றும் ராணுவ நடவடிக்கைகளின் டி.ஜி கலந்துக் கொண்டனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் கால்வன் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு சீனாவை நம்புவது எளிதல்ல என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். எனவே, இந்த விஷயத்தில் இந்தியா முழு விழிப்புணர்வுடன் முன்னேறி வருகிறது. 
அந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிர் இழந்தனர். இந்த நடவடிக்கைக்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது என்பது வேறு விஷயம். இந்தியாவின் பதில் நடவடிக்கைகளில் சீனாவின் கட்டளை அதிகாரி உட்பட பல ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.


இந்தியாவின் பெரிய முடிவுகள் 
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் டோவல், பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) ஜெனரல் பிபின் ராவத், ராணுவத் தலைவர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நர்வானே மற்றும் விமானப்படைத் தலைவர் ஆர்.கே.எஸ் படோரியா ஆகியோர் சீன விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தனர். பாங்கோங் ஏரியின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் LACயில் இந்தியா ராணுவ வலிமையை அதிகரித்தது.


சீனா எல்லைப் பகுதியில் பெரிய அளவில் துருப்புக்களை நிறுத்தியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா 60,000 வீரர்களை அனுப்பியது. இந்திய விமானப்படை அங்கு பொறுப்பேற்றது. எந்தவொரு எதிரி விமானமும் அந்த பகுதிக்குள் நுழைய அனுமதிக்காதபடி போர் விமானங்கள் நிறுத்தப்பட்டன.



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR