புது டெல்லி: விரைவில் பொதுமக்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. மத்திய அரசு மற்றும் பொதுமக்கள் இருவரும் நிம்மதிப் பெருமூச்சு விட உள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறித்து வரும் ஒவ்வொரு செய்தியும் இந்திய மக்களுக்கு சந்தோசத்தை அளிக்கும் வண்ணம் உள்ளது. கடந்த எட்டு நாட்களில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 77.60 டாலரிலிருந்து 68.40 டாலராக குறைந்துள்ளது. கடந்த 10 மாதங்களில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இதுவாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் காரணமாக, நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனங்களும் விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையை (petrol and diesel price down) குறைக்கும் எனத் தெரிகிறது. கடந்த எட்டு நாட்களில் கச்சா விலையில் ஏற்பட்ட 8.20 டாலர் வீழ்ச்சியின் அடிப்படையில் நாம் கணக்கிட்டாலும், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ .4 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ .5 ஆகவும் குறைக்க வாய்ப்பு உள்ளது.


இது நடந்தால், ஒன்றிய அரசாங்கத்தின் மீதான மக்களின் கோவம் குறைய வாய்ப்புள்ளது. மேலும் அரசியல் ரீதியாக மோடி அரசுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும். குறிப்பாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, ​​பணவீக்க பிரச்சினையில் எதிர்க்கட்சி தொடர்ந்து மத்திய அரசை கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்து வருகிறது. 


இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மோடி அரசு பெட்ரோலிய பொருட்களுக்கான விலையை உயர்த்தி, அதன் மூலமாக ரூ .3.35 லட்சம் கோடி வசூலித்துள்ளது எனக்கூறி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினையை எழுப்பினார்.


ALSO READ | பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சாதனை! ஒரே ஆண்டில் கலால் வரி வசூல் ரூ.3.35 லட்சம் கோடி


இந்த சமயத்தி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைந்தால் மோடி அரசு மீது மக்களின் கோபம் குறையலாம். மேலும் ஒன்றிய அரசாங்கத்திற்கு கிடைக்கும் இரண்டாவது நன்மை என்னவென்றால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மலிவானதாக இருப்பதால், உள்நாட்டு சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தானாகவே குறைந்துவிடும், மேலும் ஒன்றிய அரசாங்கத்தின் வருவாய் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வருவாய் வசூல் செய்வதற்கான மிகப்பெரிய ஆதாரமாக பெட்ரோலிய பொருட்கள் உள்ளன. பொதுவான வாடிக்கையாளர் செலுத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 60 சதவீதம் மத்திய மற்றும் மாநில கருவூலத்திற்கு செல்கிறது. ஒன்றிய அரசாங்கத்திற்கு மற்றொரு நன்மை என்னவென்றால், அது பணவீக்க வீதத்தைக் குறைக்க உதவும்.


இருப்பினும், கடந்த வாரத்தில் கச்சா விலை வீழ்ச்சிக்கு (Crude Oil Cheaper) இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா இடையேயான மோதலின் முடிவு காரணமாக, உலகளாவிய கச்சா உற்பத்தி ஒரு நாளைக்கு நான்கு லட்சம் பீப்பாய்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது காரணம், கொரோனாவின் மோசமான நிலைமையால் பல நாடுகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு மீண்டும் அதிகரிக்க இன்னும் நேரம் எடுக்கும் என்று சர்வதேச வணிக சமூகம் தெரிவித்துள்ளது.


ALSO READ | Fuel vs GST: பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் கீழ் வருமா? வந்தால் அதன் தாக்கம் என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR