ஆதார் சேவை வழங்கி வரும் UIDAI மையத்தின் சேவை உதவி எண்கள், ஆண்ட்ராய்டு போன்களின் போன்புக்கில் தானாக பதிவானதாக கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதார் சேவை வழங்கி வரும் UIDAI மையத்தின் சேவை உதவி எண்கள், ஆண்ட்ராய்டு போன்களின் போன்புக்கில் தானாக பதிவானதாக நேற்று திடீர் சர்ச்சை எழுப்பப்பட்டது. இது 1800-300-1947 என்ற இலவச உதவி அழைப்பு எண் பதிவானது. 


அந்த எண் UIDAI என்ற பெயருடன் தொடர்புக்காக சேமித்து வைக்கும் ‘கான்டாக்ட்ஸ்’ பகுதியில் தானாகவே பதிந்தது. இதனால் ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.


இந்த தகவலை ஆதார் ஆணையம் முற்றிலும் மறுத்தது. 1947 என்ற எண் மட்டுமே தற்போது செயல்பாட்டில் இருப்பதாகவும், உதவி எண்களை பதிவிடுமாறு எந்த ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தையும் தாங்கள் கேட்டுக்கொள்ளவில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்தது. 


இந்நிலையில், ஆதார் உதவி எண்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் பதிவானதற்கு ஆண்ட்ராய்டு இயங்குதளமே காரணம் என்று கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளதுடன், அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளது. அதில், 2014 -ம் ஆண்டு UIDAI சேவை எண்ணும் 112 என்ற பேரிடர் உதவி எண்ணும் ஆண்ட்ராய்டு இயங்கு தளம் ஸ்டெப்அப் ஜிசார்ட்-ல் கவனக்குறைவாக கோடிங் செய்யப்பட்டு விட்டதாக கூகுள் நிறுவனம் விளக்கம், அளித்துள்ளது.


தற்போது இத்தைகைய செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ள கூகுள், பயனாளர்களின் ஆண்ட்ராய்டு கருவிகளில் அங்கீரிக்கப்படாத எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை என்பதற்கு உறுதியளித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.