2017-18ம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 7.41 லட்சம் கோடி என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுக்குறித்து மத்திய நிதியமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:- 


 


ஆகஸ்ட் முதல் மார்ச் மாதம் வரை சராசரியாக ஒரு மாதத்திற்கு ரூ.89,885 கோடி வசூலாகி உள்ளது.



 


மொத்தம் ஜிஎஸ்டி வருவாய் ரூ.3.66 லட்சம் கோடி. அதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.1.19 லட்சம் கோடி என்றும் மாநில ஜிஎஸ்டி ரூ.1.72 லட்சம் கோடி என்றும் கூறப்பட்டுள்ளது.



 


ஜூலை 2017 வருவாய் உட்பட, 2017-18-ம் நிதியாண்டுக்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.7.41 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.



 


அனைத்து மாநிலங்களின் சராசரி வருவாய் இடைவெளி போன வருடத்தில் 17 சதவீத அளவில் இருந்தது எனவும் கூறப்பட்டுள்ளது.



 


கடந்த 8 மாதங்களில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இழப்பீட்டு தொகை ரூ.41,147 கோடியாகும்.