ஜூன் 30-ஆம் தேதிக்கு மத்திய அரசு (Unlock 2.0)அன்லாக் 2.0-க்கான வழிகாட்டுதல்களை வெளியிட வாய்ப்புள்ளது. எதிர்வரும் Unlock 2.0-ன் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச வழித்தடங்களில் விமான பயணத்தை அரசாங்கம் அனுமதிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி புதுடெல்லி-நியூயார்க், மும்பை-நியூயார்க் வழித்தடங்களில் சர்வதேச விமானங்கள் அன்லாக் 2.0(Unlock 2.0)-ல் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


READ | குறைந்தது எரிவாயு விலை; உங்கள் ஊரில் பெட்ரோல் - டீசல் விலை என்ன?


இது தவிர, வளைகுடா நாடுகளுக்கான நடவடிக்கைகளைத் தொடங்க தனியார் கேரியர்களையும் அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


கல்வி நிறுவனங்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளைத் திறப்பது தொடர்பான முடிவுகள் குறித்து கேட்கப்பட்டபோது, இச்சேவைகளை தொடங்க மாநிலங்கள் “தயக்கம் காட்டுவதால்” இதற்கான வழிகாட்டுதல்களை Unlock 2.0-ல் வெளியாக வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.


முன்னதாக கடந்த ஜூன் 18 அன்று, முதலமைச்சர்களுடனான தனது மெய்நிகர் சந்திப்பில், பிரதமர் நரேந்திர மோடி மற்றொரு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை எனவும், Unlock 2.0 பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் குறைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


மேலும், "பூட்டுதல் பற்றிய வதந்திகளை எதிர்த்துப் போராட" வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார், நாடு இப்போது "இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டிய" கட்டாயத்தில் உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


"Unlock 2.0 பற்றியும், நம் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து சாத்தியங்களையும் எவ்வாறு குறைப்பது என்பதையும் பற்றி இப்போது நாம் சிந்திக்க வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


READ | படிப்படியாக திறக்கப்படும் நாடு; இன்று முதல் எதற்கு அனுமதி? எதற்கு அனுமதி இல்லை?


குறைக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன், பொருளாதார செயல்திறனின் குறிகாட்டிகள் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். பணவீக்கமும் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது, மேலும் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான தொடர்பான நடவடிக்கைகளை அதிகரிக்க மாநிலங்களை நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். 


இந்நிலையில் வரும் ஜூன் 30-அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் Unlock 2.0 வழிகாட்டுதல்களில் பிரதமர் மோடியின் முந்தைய வலியுறுத்தல்களுக்கான நடைமுறை வழிகாட்டுதல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.