விமான நிலையங்களில் ஏஏஐ சார்பில் மலிவு விலை டீ, ஸ்நாக்ஸ் கவுண்டர் திறக்க திட்டமிட்டுள்ளது.....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் டீ விலை அதிகளவில் இருப்பதாக தொடர் புகார்கள் வந்துள்ளதையடுத்து ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா குறைந்த விலை கவுண்டரை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 


முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், விமான நிலைய டீ விலை குறித்து, தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத்திலும் எம்.பிக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியாவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், விமானப் பயணம் என்பது மேல்தட்டு மக்களுக்கு மட்டும் என்ற நிலை இருந்தது. 


ஆனால் உடான் திட்டம் மூலம் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் விமானப் பயணம் மாறியுள்ளன. அவர்கள் அருந்தும் டீ, ஸ்நாக்ஸ் உள்ளிட்டவையும் மலிவான விலையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை எழுந்தது.