கடந்த மார்ச் 19-ம் தேதி அன்று  ஒரு தனியார் தொலைக்காட்சியில் "கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ஃபேஸ்புக்கில் உள்ள 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களைத் திருடி, டிரம்ப் தேர்தலில் வெற்றிபெற உதவி செய்ததாக செய்தி வெளியிட்டது. இந்த செய்தியால் உலக முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பல சிக்கல்கள் உருவாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் சமூக வலைத்தளங்கள் மீது மக்களுக்கு இருந்து வந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது. பெரும்பாலானோர் தங்களை சமூக வலைத்தள பயன்பாட்டை நிறுத்தி விடலாமா என்ற வாக்கில் நினைக்க தூண்டியிருக்கிறது.


இந்த தகவல் திருட்டு சர்ச்சையில் சிக்கி கொண்ட பேஸ்புக், பங்குகளின் வீழ்ச்சி காரணமாக பல ஆயிரம் கோடி டாலர்களை இழந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலின் போது தகவல் திருட்டு நடந்ததை ஒப்புக் கொண்ட பேஸ்புக் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டதோடு, இனி மேல் இது போன்ற நிகழ்வு இருக்காது என்றும் உறுதியளித்தது.


இருப்பினும் பேஸ்புக்கில் இருந்து வெளியேற வேண்டிய நேரம் இது என்று பல முக்கிய பிரமுகர்கள் கூறி வருவதோடு ஒருசிலர் பேஸ்புக்கின் கணக்கையும் முடித்து கொண்டனர். இந்த நிலையில் இந்திய தேர்தலிலும் பேஸ்புக் தகவல் திருட்டில் ஈடுபடவுள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதுகுறித்து மத்திய அரசு ஏற்கனவே பேஸ்புக் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


பேஸ்புக் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு....! 


தகவல் திருட்டு தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் வரும் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் விளக்கமளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 7-ம் தேதிக்குள் பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து திருப்தி அளிக்கும் வகையிலான விளக்கம் வரவில்லை எனில் பேஸ்புக்கை இந்தியாவில் தடைசெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.