ஜம்மு-காஷ்மீர் பிளவுக்கு பின்னர் நாட்டின் புதிய அரசியல் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வமாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, அரசாங்கம் 28 மாநிலங்களையும் ஒன்பது யூனியன் பிரதேசங்களையும் காட்டும் நாட்டின் புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டது.


ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்வதன் மூலம் பாராளுமன்றம், மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. மேலும் மாநிலமாக இருந்து ஜம்மு-காஷ்மீர் பிளவுப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.



இந்நிலையில் தற்போது ஜம்மு-காஷ்மீர் பிளவுக்கு பின்னர் நாட்டின் புதிய அரசியல் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்த புதிய வரைபடம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பிளவுபடுத்தலைக் குறிக்கிறது, அதேவேளையில் அக்சாய் சின் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.


புதிய வரைபடத்தில், கில்கிட்-பால்டிஸ்தான் லடாக்கின் ஒரு பகுதியாகவும், பாக்கிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர், ஐம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாகவும் காட்டப்பட்டுள்ளது.


லடாக் யூனியன் பிரதேசம், கார்கில் மற்றும் லே ஆகிய இரண்டு மாவட்டங்களைக் கொண்டுள்ளது, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் 20 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.


ஒரு வர்த்தமானி அறிவிப்பில், அரசாங்கம் லே மாவட்டத்தில் உள்ள பகுதிகளை "கில்கிட், கில்கிட் வஸாரத், சிலாஸ், பழங்குடியினர் பிரதேசம் மற்றும் லே மற்றும் லடாக், தற்போதைய கார்கிலின் நிலப்பரப்பைத் தவிர" என்றும் குறிப்பிட்டுள்ளது.


இந்த உத்தரவு ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (சிரமங்களை நீக்குதல்) இரண்டாவது உத்தரவு, 2019 என்று அழைத்துள்ளது.


ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச வரைபடம் முசாபராபாத், மிர்பூர் மற்றும் பாக்கிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் கீழ் இருக்கும் பூஞ்ச் ​​பகுதி உட்பட 20 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.



1947-ஆம் ஆண்டில், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா, ஜம்மு, உதம்பூர், ரியாசி, அனந்த்நாக், பாரமுல்லா, பூஞ்ச், மிர்பூர், முசாபராபாத், லே மற்றும் லடாக், கில்கிட், கில்கிட் வஸாரத், சில்ஹாஸ் மற்றும் பழங்குடியின பகுதிகள் என 14 மாவட்டங்கள் இருந்தன.


பாராளுமன்றத்தின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் இந்திய அரசியலமைப்பிலிருந்து 370-வது பிரிவை திறம்பட ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தை 2019 ஆகஸ்டில் வெளியிட்டார்.


அக்டோபர் 31-ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் ஒரு மாநிலமாக அழைப்பதை நிறுத்தி, அதிகாரப்பூர்வமாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவு பிறப்பித்தார்.


மேலும் புதுச்சேரி போன்று, ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தை கொண்ட யூனியன் பிரதேசமாகவும், சண்டிகர் போன்ற சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் தனி தனி லெப்டினன்ட் கவர்னர்கள் தலைமை தாங்குவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.