ஆதாருடன் மொபைல் இணைக்க புதிய முறை: மத்திய அரசு
கடந்த பிப்ரவரி 6-ம் தேதி தொலைபேசி சேவை வழங்குவோர் தங்கள் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைக்கும் எளிய நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
கடந்த பிப்ரவரி 6-ம் தேதி தொலைபேசி சேவை வழங்குவோர் தங்கள் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை செயல்படுத்தும் விதமாக மத்திய தொலை தொடர்புத்துறை சில விதிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி,
மொபைல் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை ஓ.டி.பி., (OTP) பயன்படுத்தியும், செயலி மூலமாகவும் அல்லது ஐ.வி.ஆர்.எஸ்., (IVRS) மூலமாகவும் பதிவு செய்ய முடியும்.
இதன் மூலம் மொபைல் வாடிக்கையாளர்கள் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு செல்லாமல் தங்கள் ஆதார் எண்களை இணைக்க முடியும்.