டிகிரி முடித்த முஸ்லிம் பெண்களுக்கு மோடி அரசு நிதியுதவி
பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு ரூ.,51000 நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
முஸ்லிம் சமுதாயத்தில், கல்லுாரிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு ரூ.,51000 நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் நிதி உதவியின் கீழ் செயல்படும், மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர், ஷாகிர் ஹுசைன் அன்சாரி கூறியது:-
சிறுபான்மையினர் விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நடந்த கூட்டத்தில்,
> 9-ம் மற்றும் 10-ம் வகுப்பை முடிக்கும் முஸ்லிம் மாணவியருக்கு ரூ.,10000
> 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு முடிக்கும் மாணவியருக்கு ரூ.,12000 உதவித் தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், உதவித் தொகை பெற்ற மாணவியர், பட்டப்படிப்பை முடித்ததும், அவர்களுக்கு ரூ.,51000 நிதியுதவி வழங்கப்படும். தற்போது, இத்திட்டத்திற்கென தனி இணையதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த திட்டம் தொடர்பான அனைத்து விபரங்களும் பதிவேற்றம் செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலுடன், திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.