எரிபொருள் மீதான வரியை 15 நாட்களுக்கு ஒருமுறை அரசு மறுபரிசீலனை செய்யும்: நிர்மலா சீதாராமன்
கச்சா எண்ணெய், டீசல்-பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) மீது விதிக்கப்படும் புதிய வரியை 15 நாட்களுக்கு ஒருமுறை அரசு மறுபரிசீலனை செய்யும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய் நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், கச்சா எண்ணெய், டீசல்-பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) மீது விதிக்கப்படும் புதிய வரியை 15 நாட்களுக்கு ஒருமுறை அரசு மறுபரிசீலனை செய்யும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. கச்சா எண்ணெய், டீசல்-பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரியை 15 நாட்களுக்கு ஒருமுறை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இனி, சர்வதேச விலைகளை மனதில் வைத்து, ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் வரிகள் மறுஆய்வு செய்யப்படும்.
மேலும் படிக்க | உலக வங்கி - IMF கூட்டங்களில் பங்கேற்க நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்
மத்திய அரசு எடுத்துள்ள முடிவு
சாமானியர்களின் நலனுக்காக அரசும் அவ்வப்போது விலையில் திருத்தம் செய்யலாம். மறுபுறம், அமைச்சரவை கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு பெரிய நிவாரணம் அளித்துள்ளது. அதிகரித்து வரும் எரிவாயு விலைக்கு மத்தியில், நிவாரணம் வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு தடவை மானியமாக ரூ.22 ஆயிரம் கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
நிதியமைச்சர் சீதாராமன் கூறுகையில், இது சிறிது கடினமான நேரம் என்றும், உலகளவில் கச்சா எண்ணெய் விலை கட்டுக்கடங்காமல் உள்ளது என்றும் கூறினார். "நாங்கள் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த விரும்பவில்லை, ஆனால் உள்நாட்டில் எண்ணெய் இருப்பை அதிகரிக்க விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க | IDBI வங்கி தனியார் மயமாக்கல் குறித்து நிதியமைச்சகம் வழங்கிய முக்கிய தகவல்!
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்க்கும் வரி
பிரிட்டன் போன்று உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கும் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு டன்னுக்கு ரூ.23,250 வரி விதிக்கப்பட்டுள்ளது. புதிய வரியானது SEZ யூனிட்களுக்கும் பொருந்தும். ஆனால் அவற்றின் ஏற்றுமதிக்கு எந்த தடையும் இருக்காது என்று வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்தார். இதனுடன், ரூபாயின் வீழ்ச்சி குறித்து, இந்திய ரிசர்வ் வங்கியும், அரசும் நிலைமையை கண்காணித்து வருவதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | e-rupee: பாதுகாப்பான பணப்பரிமாற்றத்திற்கு இந்திய அரசின் முதல் டிஜிட்டல் ரூபாய்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ