கர்நாடக அரசியலில் பேராசை வென்று, ஜனநாயகத்தை தோற்கடிதுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது., 



"ஆட்சியேற்ற முதல் நாளிலிருந்து, கர்நாடகாவில் காங்கிரஸ் - ஜே.டி.எஸ் கூட்டணி, மக்களின் நலனுக்காக உள்ளேயும் வெளியேயும் பாடுபட்டு வந்தது. அவர்கள் கூட்டணியை அச்சுறுத்தலாகவும், அதிகாரத்திற்கான பாதையில் ஒரு தடையாகவும் சிலர் பார்த்தார்கள்.


அவ்வாறு பார்த்தவர்களின் பேராசை இன்று வென்றுள்ளது.


ஜனநாயகம், நேர்மையினை கர்நாடக மக்கள் இழந்தனர்." என குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சிகளின் 15 MLA-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.


மேலும் 2 சுயேட்சை MLA-க்களும் குமாரசாமிக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தனர். இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு MLA நடுநிலை வகிப்பதாக தெரிவித்தார்.


17 MLA-க்களின் ஆதரவை இழந்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி பலம் 101-ஆக குறைந்தது. குமாரசாமி தலைமையிலான ஆட்சி பறிபோகும் நிலை ஏற்பட்ட நிலையில், இன்று சட்டசபை கூடியது. 


இதற்கிடையில், பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு MLA நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டு ஆளும் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க மாயாவதி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் மகேஷ் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.


கூட்டத்தின் போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமிக்கு ஆதரவாக 99 வாக்குகளும். அரசுக்கு எதிராக 105 வாக்குகளும் பதிவானது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்வதாக அறிவிக்கப்பட்டது. குமாரசாமி அரசின் ஆட்சி கவிழ்ந்ததால், எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.