சிலிண்டர் போன்ற 49-பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு: நிதி அமைச்சர்!
சமையல் எரிவாயு, தண்ணீர் கேன், சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
தனியார் சமையல் எரிவாயு சிலிண்டர், 20 லிட்டர் குடிநீர் கேன் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான வரி 18-ல் இருந்து 12% மாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரம் உள்ளிட்ட மதிப்பு மிக்க கற்களுக்கு வரி 3-ல் இருந்து 0.25% ஆக குறைக்கப்படுகிறது.
மிட்டாய், நீர்ப்பாசன சாதனங்கள், மெஹந்தி பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர குறிப்பிட்ட ஜாப் ஒர்க்குகளுக்கும் வரி குறைக்கப்படுகிறது.
இவை அனைத்தும் வரும் 25-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளனர். வரிக்குறைப்பு காரணமாக அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.