ஜிஎஸ்டி 31-ஆவது கவுன்சில் கூட்டம் டிசம்பர் 22 ஆம் தேடி நடைபெற்றது. அதில் 33 பொருட்களுக்கான வரி விதிப்பு மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. சொகுசு, ஆடம்பரம் என்ற வகையில் வரக்கூடிய பொருட்கள் மட்டுமே 28 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்பில் உள்ளதாகவும், மற்ற அனைத்துப் பொருட்களும் 18 சதவீத வரி வரம்புக்குள் வந்துவிட்டதாகவும். ஒரே அடுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கொண்டு வருவதே அரசின் இலக்கு என்றும் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னால் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 


அதில், "ஜிஎஸ்டி வரம்பை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதத்துக்குள் கொண்டு வருமாறு நாங்கள் ஏற்கனவே கோரிக்கை முன்வைத்து வந்தோம். ஆனால் எங்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. அந்தக் கோரிக்கையை முட்டாள்தனமானது என கருதியது மத்திய அரசு. தற்போது காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கையை இலக்காக நிர்ணயித்துள்ளடு மத்திய அரசு.


மேலும் தலைமைப் பொருளாதார ஆலோசகர் முன்வைத்த 15 சதவீத நிலையான ஜிஎஸ்டி என்ற யோசனையை மத்திய அரசு முதலில் அசட்டை செய்தது. தற்போது அதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. 


நேற்று முட்டாள்தனமாகவும் அசட்டுதனமாகவும் தெரிந்த ஒரு விசியம், தற்போது மத்திய அரசின் இலக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு பதிவிட்டுள்ளார் முன்னால் நிதியமைச்சர் பா.சிதம்பரம்.