ஜி.எஸ்.டி., வரி  ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல் அமல்படுத்தப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைக்குறித்து மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் கூறியதாவது:- நாடு முழுவதும் வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி., வரி அமல்படுத்தப்படும். இதற்கு அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.


மார்ச் 9-ம் தேதி துவங்கும் இரண்டாவது கட்ட பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி.,மசோதா தொடர்பான ஐஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி ஆகிய வரைவு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இழப்பீடு வரைவு மசோதாவுக்கு ஏற்கனவே கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.