உத்திரபிரதேச மாநில கள்ளச்சாராய விவகாரத்தில் சம்பவந்தப்பட்டவர்களுக்கு உச்சகட்ட தண்டனை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநில சட்டபேரவை கூட்டத்தில் வாக்குவாத தருவாயில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்., மாநிலத்தின் கோட்பாடுகளை சிலர் மீற என்னுகின்றனர். அவர்களை விரைவில் கண்டறிந்து தக்க பாடம் புகட்டுவோம் என பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.


உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 100 பேர் பலியாகியுள்ளனர். தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எப்படி வந்தது? மக்கள் பலியானதிற்கான காரணம் என்ன? என்பது தொடர்ந்து மர்மமாக இருந்து வரும் நிலையில் இந்த விவகாம் தொடர்பாக விசாரிக்க உத்தரபிரதேச அரசு சார்பில் 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.


உத்தரபிரதேசம் மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டம், பாலுப்பூர் ரூர்கி பகுதியில் பரவி வரும் கள்ளச்சாராய விற்பனையால் கடந்த 8-ஆம் தேதி இம்மாவட்டத்தை சேர்ந்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.


இதில் 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர் எனவும் தகவல்கள் வெளயானது. 


பின்னர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பலரும் அடுத்தடுத்து உயிரிழக்க, தற்போது பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதாக காவல்துறை அறிக்கை தெரிவிக்கின்றது.


இதற்கிடையில் நேற்று இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உத்தரபிரதேச அரசு அமைத்துள்ளது. இக்குழு விரைவில் தனது விசாரணையை தொடங்கவுள்ளது.


முன்னதாக இந்த கோர சம்பவத்துக்கு உத்தரபிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இரங்கலும், கண்டனமும் தெரிவித்தார். சுமார் 100 உயிர்களை பலிவாங்கி இந்த கோர சம்பவத்துக்கு உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆட்சி நடத்திவரும் பா.ஜ.க. அரசுகள் பொறுப்பேற்க வேண்டும எனவும் வலியுறுத்தியுள்ளார்.