பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல் வாக்கு எண்ணிக்கை கிட்டதட்ட 75% முடிவடைந்த நிலையில் பாஜக தங்களது வெற்றியை உறுதி செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடுமுழுவதும் அணைவரது கவணத்தையும் ஈர்த்துள்ள இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணியளவில் துவங்கியது. மிகவும் பரபரப்பாக நடைப்பெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையானது பாஜவி-ற்கு வெற்றியை வழங்கியுள்ளது!


குஜராத்: 182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் கடந்த 1997-98 தேர்தல் முதல் தொடர் வெற்றிப் பெற்றுள்ள பாஜக, தங்களது ஆட்சியை பலமாக ஊன்ற உள்ளது. அதேப்போல் 68 தொகுதிகள் கொண்ட இமாச்சல் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பாஜக ஆட்சி பிடித்துள்ளது. இரண்டு மாநிலங்களிலும் தனி பெருன்பான்மையுடன் பாஜக வெற்றிப் பெற்றுள்ளதால், மோடி அலை இன்னும் ஓயவில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது.


முன்னதாக, தங்களது வெற்றி உறுதியானதும் டெல்லி பாஜக தலைமை செயலகத்தில் தொண்டர்கள் கூடி வெற்றியை கொண்டாடினர். இந்நிலையில் தற்போது அணைத்து தொகுதிக்களுக்குமான முடிவுகள் வெளியாகியுள்ளது!


தற்போதைய நிலவரப்படி தேர்தல் முடிவுகள்...



00:45 19-12-2017




21:02 18-12-2017


குஜராத் வாக்கு எண்ணிக்கை முடிவில்....
பாஜக - 99,
காங்கிரஸ் - 80,
இதரவை - 3




19:39 18-12-2017