குஜராத் மாநிலம் பருச்சில் உள்ள  ரசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலம் பரூச் பகுதியில்  ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். வெடிப்புக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. நிர்வாக குழு  சம்பவம் நடந்த இடத்தில் தற்போது உள்ளது. இந்த வழக்கில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


ரசாயன தொழிற்சாலை நிறுவனதில் நேரிட்ட வெடிப்பு சம்பவத்தின் போது, ​​அதன் சத்தம் வெகுதூரம் கேட்டது. இந்த வெடி விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெடி விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். பலத்த முயற்சிக்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.



மேலும் படிக்க | பிரதமர் மோடி  - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  இடையே இன்று பேச்சு வார்த்தை



தஹேஜ் தொழிற்பேட்டை பகுதியில் அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இடம் அகமதாபாத்தில் இருந்து 235 கிமீ தொலைவில் உள்ளது. இதுகுறித்து பருச் எஸ்பி லீனா பாட்டீல் கூறுகையில், விபத்து நடந்த போது ரியாக்டர் அருகே 6 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர் என்றார். குண்டுவெடிப்புக்குப் பிறகு தீ விபத்து ஏற்பட்டது.


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR