குஜராத் சட்டசபை தேர்தல்: வரிசையில் நின்று மக்கள் வாக்குப்பதிவு!!
குஜராத்தில் இன்று காலை 7 மணி முதல் ஆறு இடங்களில் மறுவாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க்கனவே அறிவித்துள்ளது. அந்த வகையில் இன்று காலை 7 மணி முதல் இந்த ஆறு இடங்களில் மறுவாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
டஸ்கோரி, வாடகம், விராம்கம் சவ்லி ஆகிய பகுதிகளில் இந்த மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
குஜராத்தில் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 182 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டுகட்டமாக நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
குஜராத் தேர்தலில் பிரதான போட்டியாளர்களாக ஆளும் பாஜக, மற்றும் காங்கிரஸும் கடுமையா போராடி வருகின்றன.
இந்நிலையில் இன்று குஜராத் மாநில டஸ்கோரியில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.