251 பெண்களுக்கு இலவச திருமணம்!
குஜராத்தில் 251 பெண்களுக்கு தொழிலதிபர் ஒருவர் மிக பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.
குஜராத்தில் 251 பெண்களுக்கு தொழிலதிபர் ஒருவர் மிக பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகேஷ் சவானி என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக மிகவும் கஷ்டத்தில் இருக்கும் ஏழைப் பெண்களை பார்த்து அவர்களுக்கு திருமணம் நடத்திவைத்து வருகிறார்.
இந்நிலையில் இம்முறை அவர் தந்தையை இழந்த 251 பெண்களுக்கு அவர் திருமணம் செய்து வைத்திருக்கிறார். இதில் அனைத்து மதங்களை சேர்ந்த பெண்களுக்கு அவர் திருமணம் செய்துவைத்து உள்ளார். 251 பெண்களில் ஒருவர் மாற்றுத்திறனாளி ஆவார்.
திருமணத்தை நடத்தி வைத்ததோடு மட்டுமின்றி ஒவ்வொரு பெண்ணுக்கு தலா 5 லட்சம் ரூபாய் செலவில் சீர்வரிசைகளையும் அவர் வழங்கியுள்ளார்.