குஜராத்தை நோக்கி வாயு புயல் நகர்ந்துவரும் நிலையில், அங்குள்ள 9 மாவட்டங்களில் இருந்து சுமார் 3,00,000 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘வாயு’ என பெயரிடப்பட்டுள்ளது. அந்த புயல் தீவிரமடைந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்தது வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி, அந்த புயல் குஜராத் கடற்கரையில் இருந்து 650 கிமீ தொலைவில் நிலைக்கொண்டிருந்தது.


இந்நிலையில், வாயு புயல் இன்று மேலும் தீவிரமடைந்து, அது வடக்கு திசை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. நாளை குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மகுவா கடற்கரை இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் புயல் கரையை கடக்கும்போது 145 கிமீக்கு மேல் பலத்த சூறைக்காற்று வீசும். இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில் ஒடிசா மாநிலத்தை தாக்கிய பானி புயல் அந்த மாநிலத்தின் 11 மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று வாயு புயலும் குஜராத்தில் 7 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள 9 மாவட்டங்களில் இருந்து சுமார் 3,00,000 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.