182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு 2 கட்டமாக நடைபெறும். டிசம்பர் 9-ம் தேதி மற்றும் 14-ம் தேதி என வாக்குபதிவு இரண்டு கட்டமாக நடைபெறும். குஜராத் மாநிலத்தில் முதலாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடியும் கட்டத்தில் உள்ளதால், காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் பேனர்கள் வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேனரில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. அகமது பட்டேலை குஜராத் மாநில முதல்-மந்திரியாக்க காங்கிரசுக்கு இஸ்லாமியர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகத்துடன் ராகுல் காந்தி மற்றும் அகமது படேல் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்த பேனரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதற்க்கு காரணம் பாரதீய ஜனதா கட்சி தான் என காங்கிரஸ் குற்றம் சாட்டியது.


இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி அகமது படேல் கூறியது,  நான் முதலமைச்சர் வேட்பாளர் அல்ல என்றும், இது பா.ஜ.க.வின் தவறான பிரச்சாரமாக இருக்கிறது. தோல்வி பயத்தில் பா.ஜ.க.வினர் இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனர். நான் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்றார் பட்டேல்.


குஜராத் தேர்தல்; கருத்துக்கணிப்பு பெயரில் கருத்து திணிப்பு- எச்.ராஜா


ஒருவேளை காங்கிரஸ் கட்சி குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் முதல்-அமைச்சர் யார் என்பதில் எந்தவிதமான அறிவிப்பை இதுவரை அறிவிக்க வில்லை.


பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் பா.ஜ.க.வை காங்கிரஸ் தோற்கடிக்குமா? என்று தேர்தலுக்கு பின்பு தான் தெரியும்.


1998 முதல் குஜராத்தில் பிஜேபி அதிகாரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.