இனி பள்ளியில் `Yes Sir-க்கு NO; ஜெய் ஹிந்த் & ஜெய் பாரத்-க்கு அனுமதி....
வருகைப் பதிவின் போது `யெஸ் சார்` எனச் சொல்வதற்கு பதில் ஜெய்ஹிந்த் எனக் கூறுமாறு பள்ளி மாணவர்களை, குஜராத் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது!
வருகைப் பதிவின் போது "யெஸ் சார்" எனச் சொல்வதற்கு பதில் ஜெய்ஹிந்த் எனக் கூறுமாறு பள்ளி மாணவர்களை, குஜராத் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது!
உலகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தினமும் காலை வகுப்பில் நடக்கும் முதல் நிகழ்வு இன்றைக்கு எத்தனை மாணவர்கள் வகுப்பிற்கு வந்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில், வருகை பதிவேடு எடுப்பது உண்டு. அப்போது, அனைத்து மாணவர்களும் தங்களின் பெயரை ஆசிரியர் கூறுகையில், Yes Sir அல்லது present Sir என்று கூறுவது வழக்கம். இந்த முறையை பல ஆண்டு காலமாக கைபிடித்து வருகின்றனர். இந்நிலையை, மாற்றும் திட்டத்தில் குஜராத் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, அம்மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் இதுதொடர்பான சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும், வருகைப் பதிவின் போது "யெஸ் சார்", "பிரசென்ட் சார்" என்று கூறாமல், ஜெய்ஹிந்த் அல்லது ஜெய் பாரத் என்று சொல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே தேசப்பற்றை வளர்க்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய முறை, புத்தாண்டு (நேற்று) முதல் குஜராத் மாநில பள்ளிக் கூடங்களில் அமலுக்கு வந்துள்ளது.