குல்பூஷன் விவகாரம் நாளை விளக்கம்; சுஷ்மா சுவராஜ்!!
பாராளுமன்றத்தில் குல்பூஷன் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளுக்கு நாளை விளக்கம் அளிக்கப்படும் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பாராளுமன்றத்தில் குல்பூஷன் ஜாதவின் குடும்பத்தினரை பாக்கிஸ்தான் அவமதித்ததாக கூறி எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியதுடன் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கடும் கூச்சல் குழப்பமும் நிலவியதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நாளை விளக்கம் அளிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.