பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தல் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்குகியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ். இவர் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி கைது செய்தது. பிறகு அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.


இதை எதிர்த்து, ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா கடந்த 8-ம் தேதி வழக்கு தொடுத்து குல்பூஷண் ஜாதவிற்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை தடை செய்ய வேண்டும் என இந்தியா வாதிட்டது. 


ஆனால், வியன்னா ஒப்பந்தப்படி வேவு பார்ப்பவர்கள், பயங்கரவாதிகள் மற்றும் உளவுத்துறையுடன் தொடர்புடையவர்கள் தொடர்பான விவகாரங்களில் சர்வதேச நீதிமன்றம் தலையிட முடியாது என பாகிஸ்தான் வாதிட்டது. 


இரு நாட்டின் வாதங்களை ஏற்றுக் கொண்ட சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து, மேலும் இன்று(18-ம் தேதி) மதியம் 3:30 மணிக்கு தீர்ப்பு வழங்க இருப்பதாக தெரிவித்து உத்தரவிட்டது.


இந்நிலையில் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணியளவில் சர்வதேச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. அதில் சர்வதேச நீதிமன்றம் நீதிபதிகள் இந்திய கோரிக்கை நியாயமானது. எனவே குல்பூஷன் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்கிறோம் என சர்வதேச நீதிமன்றம் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள். 


இந்த தீர்ப்பால் குல்பூஷன் ஜாதவின் குடும்பம் மகிழ்ச்சியில் உள்ளது.