கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 112 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பாஜக தேசிய செயலாளர் H ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

234 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் கடந்த மே 12-ஆம் நாள் 222 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் 72.13% வாக்குகள் பதிவாகின.


இந்த வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.



இதில் பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தற்போதைய நிலவரப்படி பாரதீய ஜனதா 111 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது... தனி பெரும்பான்மை ஆட்சியமைக்க தேவையான 113-க்கும் அதிகமான இடங்களில் பாஜக வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 


பாஜக வெற்றிப்பெரும் பட்சத்தில் எடியூரப்பா மீண்டும் கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்பார். 


இந்நிலையில் தற்போது பாஜக தேசிய செயலாளர் H ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கர்நாட்டக மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்...
"கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். கர்நாடக வாக்காளர் பெருமக்களுக்கு எமது அன்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.