“நான் அப்டியே shock ஆயிட்டேன்!!”- ட்விட்டரில் புலம்பிய ஹர்பஜன் சிங்!!
மிக அதிகமான மின்சார கட்டணத்தைப் பெற்றதில் அதிர்ச்சியை வெளிப்படுத்திய இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சனிக்கிழமை (ஜூன் 26) அது குறித்து ட்வீட் செய்துள்ளார்.
மின்சாரம் தாக்கி ஷாக் அடிக்கும். ஆனால், மின்சார பில்லைப் பார்த்தாலும் இப்போதெல்லாம் ஷாக் அடிக்கிறது. சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல. VIP-களுக்கு கூட அவ்வப்போது இந்த ஷாக் ஏற்படுகிறது.
இப்போது இந்த ஷாக்கால் பாதிக்கப்பட்ட VIP ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தவர். மனதில் பட்டதை உடனே வெளியில் சொல்லி விடுபவர். இந்த ஷாக்கைப் பெற்றவர் இந்திய கிரிக்கெட் வீரர், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh)!!
மிக அதிகமான மின்சார கட்டணத்தைப் (Electricity Bill) பெற்றதில் அதிர்ச்சியை வெளிப்படுத்திய இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சனிக்கிழமை (ஜூன் 26) அது குறித்து ட்வீட் செய்துள்ளார். இந்த பில்லில் வந்திருக்கும் தொகை தான் வழக்கமாக செலுத்தும் தொகையை விட ஏழு மடங்கு அதிகமானது என அவர் தெரிவித்துள்ளார்.
Chennai Super Kings அணியின் நட்சத்திர வீரரான ஹர்பஜன் சிங், தான் 33,900 ரூபாய் அளவிலான பில்லைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். இது தனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது என்றும் கூறுகிறார் ஹர்பஜன் சிங். மின்சாரம் வழங்கும் அதானி எலக்ட்ரிசிடியை சுட்டிக்காட்டி, தனது பில்லில் தனது வீட்டின் மின்சாரக் கட்டணம் மட்டுமல்லாமல் முழு பகுதியின் மின்சாரக் கட்டணமும் சேர்க்கப்பட்டுள்ளது போல் உள்ளது என்று அவர் கிண்டல் செய்துள்ளார்.
தன்னுடைய நிலையையும் தனக்கு வந்த பில்லின் விவரம் குறித்தும் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.
ஹர்பஜன் சிங் இந்தியாவின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராவார். இந்திய அணி வென்றுள்ள பல போட்டிகளில் இவருடைய மகத்தான பங்கு இருந்துள்ளது. இவர் இந்திய அணிக்காக கடைசியாக, தாகாவில் 2016 ஆம் ஆண்டு UAE-க்கு எதிரான T-20 சர்வதேச போட்டியில் விளையாடினார். அவர் துவக்கம் முதலே IPL-ன் ஒரு முக்கிய ஆட்டக்காரராக இருந்துள்ளார்.
ALSO READ: முகமூடி அணியாமல் உலா அந்த ஆட்டுக் குட்டியை கைது செய்த காவலர்!!
முதலில் Mumbai Indians அணியில் இருந்த ஹர்பஜன் சிங் தற்போது CSK-வில் உள்ளார். CSK-வின் மூத்த வீரர்களில் ஹர்பஜன் சிங் மிக முக்கிய வீரராவார். 2019 ஆம் ஆண்டு நடந்த IPL போட்டிகளில் ஹர்பஜன் சிங், 11 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி CSK இறுதிப் போட்டி வரை செல்ல பெரும் காரணமாக இருந்தார். இறுதிப் போட்டியில் CSK, Mumbai Indians அணியிடம் தோற்றது நினைவிருக்கலாம்.
ALSO READ: IPL 2020: வீட்டிலிருந்தே போட்டிகளை களைகட்ட வைப்போம்: ரசிகர்கள் உறுதி!!