நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல், மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு (PM Narendra Modi) முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் மன்மோகன் சிங், தடுப்பூசி உற்பத்தி, மேலாண்மை உள்ளிட்டவை தொடர்பாக ஐந்து ஆலோசனைகளை வழங்கி கடிதம் எழுதி இருந்தார். 


இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கடிதம் ஒன்றை எழுதி, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்  ஹர்ஷ் வர்தன், ’உங்களின் மேலான அறிவுரைகளை இந்த இக்கட்டான சூழலில் காங்கிரஸ் தலைவர்கள் கடைபிடித்தால் வரலாறு மிகவும் நன்றிக்கடன் செலுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.”  



ALSO READ | பிரதமர் தினம் 19 மணி நேரம் பணியாற்றுகிறார்: கொரோனா ‘அரசியல்’ குறித்து பியூஷ் கோயல்


மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் எழுப்பட்டன என குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.


இந்தியாவில் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.50 கோடியைத் தாண்டியது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.


COVID-19 பரவலின் மிக மோசமான கால கட்டத்தை காணும் இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 2.73 லட்சம் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது. இப்போது 20 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


ALSO READ | கொரோனா தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR