பாபா குர்மீத் ராம் ரஹிம் சிங் மீது கடந்த 2002-ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் 15 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், அவரை  குற்றவாளி என நேற்று முன்தினம் ஹரியானாவின் பஞ்ச் குலாவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த திர்ப்பை கேட்ட அவரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் கடும் ஆவேசத்துக்குள்ளான அவர்கள் பஞ்ச்குலா மற்றும் சாமியாரின் தலைமை ஆசிரமம் அமைந்துள்ள சிர்சாவில் வெறியாட்டத்தில் இறங்கினர். வாகனங்களை அடித்து நொறுக்கியும், அரசு சொத்துகளுக்கு தீ வைத்தும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதிகள் போர்க்களமாக வெடித்தது..


இந்த கலவரம் மெல்ல மெல்ல பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பெரும் கலவரமாகியது.


இந்நிலையில் தற்போது இந்த கலவரத்தால் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது உள்ளது என்று குறிப்பிடத்தக்கது.