ஆரோக்கியமான போட்டியும், கூட்டாட்சியும் தான் நாட்டின் பலம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கும் தேசிய மக்கள் பிரதிநிதிகள் மாநாடு, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் முயற்சியில் நடைபெறுகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டை பிதமர் மோடி தொடங்கி வைத்தார். 


இந்த மாநாட்டில் அதிமுக சார்பில் எம்எல்ஏக்கள் இன்பதுரை, சின்னராஜ், பாஸ்கர், கீதா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் எம்எல்ஏக்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.ராஜா ஆகயோர் பங்கேற்றுள்ளனர்.


பின்னர், விழாவில் பேசிய  பிரதமர் மோடி:- நல்ல மாற்றத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், சமூக நீதி மட்டுமே நமது குறிக்கோள் என்றும் தெரிவித்தார். 


ஆரோக்கியமான போட்டியும் கூட்டாட்சியும் தான் நாட்டின் பலம். அதிகாரிகளும் மக்களும் வளர்ச்சிக்காக பாடுபடும் போது அதன் முடிவு பெரிதாக இருக்கும். 


மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் வளர்ச்சிக்கான அளவு கோல் வலுவாக உள்ள சில மாவட்டங்கள் உள்ளன. இவைகளில் இருந்து நாம் கற்றுக்கொண்டு நலிவடைந்த மாவட்டங்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றார்.