புதிய முதலீடு திட்டம்... காதலில் தோற்றால் கை நிறைய பணம் - இதோ முழு விவரம்!

Heart Break Insurance: காதலில் தோற்றால் கண்ணீரும், தாடியும்தான் மிச்சம் என்பது பழையக்கதை, இப்போதெல்லாம் பிரேக்-அப் இன்சூரன்ஸ் என்று வந்துவிட்டது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?.
Heart Break Insurance Viral Tweet: ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் என்றால் என்ன தெரியுமா...? இது ஒரு காதல் பிரிவின் தாக்கத்தைக் குறைக்க நிதி வெகுமதிகளை வழங்கும் கொள்கையாக உள்ளது. காதலில் ஏமாற்றும் கூட்டாளிகளால் ஏற்படும் மனவேதனைகள் மற்றும் காதல் தொடர்பான பிற பிரச்சனைகளை காப்பீடு ஈடுசெய்வதாக தோன்றுகிறது. பிரேக்-அப் இன்சூரன்ஸ் மூலமாக நிதி ரீதியாகப் பயனடைந்த பிறகு, ஒருவர் தனது அனுபவத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
பிரதீக் ஆர்யன் என்பவர் தனது காதலி அவரை விட்டு சென்றதற்கு, இழப்பீடாக 25,000 ரூபாயை பெற்றதாக கூறினார். இருவரும் காதலிக்க தொடங்கியபோது, கூட்டு வங்கி கணக்கைப் பயன்படுத்தி, அதில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். மாதாமாதம் ரூ. 500 டெபாசிட் செய்தனர். காதலில், யார் யாரை ஏமாற்றினாலும், அந்த கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட முழுத் தொகையும் ஏமாந்தவருக்கு சொந்தம் என்று கூட்டாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க | ஆபாச அசைன்மெண்ட்... பாலியல் கதை எழுத சொன்ன பள்ளி - அதுவும் ஃபேன்டஸி கதை!
வைரல் ட்வீட்
பிரதீக் ஆர்யன் ட்விட்டரில்,"என் காதலி என்னை ஏமாற்றியதால் எனக்கு 25 ரூபாய் கிடைத்தது. எங்கள் உறவு தொடங்கியதும், உறவின் போது ஒரு கூட்டுக் கணக்கில் மாதாந்திர ரூபாய் 500 டெபாசிட். மேலும் யார் யாரை ஏமாற்றினாலும், எல்லாப் பணத்தையும் ஏமாற்றப்பட்டவருக்கு கொடுத்துவிடுவோம்" என்று பாலிசி செய்தோம். அதுதான் ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட் (HIF)”
அந்த ட்வீட் வைரலாகி வருகிறது. இந்த கட்டுரையை எழுதும் நேரத்தில், இடுகை 983 ரீட்வீட்களையும் 12.8K லைக்குகளையும் பெற்றது. ட்விட்டர் பயனர் தனது காதலியின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று அதில் தெரிவித்தார். ஆனால், பிரதீக் பின்வரும் ட்வீட்டில் பதிலளித்தார், அவர் பணத்தை என்ன செய்ய விரும்புகிறார் என்று கேட்டபோது, அதை வேறு காதலுக்காக ஒதுக்கிவைப்பேன் என்று கூறினார்.
பல ட்விட்டர் பயனர்கள் அவரது கதைக்கு நேர்த்தியான கருத்துகளுடன் பதிலளித்துள்ளனர். "நீங்கள் இப்போது எப்படி உணர்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், வாழ்த்துக்கள். அல்லது ஏமாற்றப்பட்டதற்காக வருத்தப்பட்டால் உங்களுக்காக வருத்தப்படுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
முதலீடா...?
"நான் முதலீட்டுத் தேர்வுகளைத் தேடிக்கொண்டிருந்தேன். இது அற்புதமான வருமானத்தைப் பெற்றதாகத் தெரிகிறது. யாரேனும் ஒத்துழைக்க விரும்புகிறீர்களா?" ஒரு பயனர் நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ