சமூக வலைத்தளங்களை தேச விரோத செயலுக்கு பயன்டுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்கள் மூலம் பல வதந்திகள் பரப்பட்டு வருகிறது. குறிப்பாக முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மரணம், குழந்தைகள் மற்றும் பசுக்கள் கடத்தல் போன்ற வதந்திகள் மூலம் பல அப்பாவிகள் தாக்குதலுக்கு உள்ளாகி மரணம் அடைந்துள்ளனர். இந்த வதந்திகளை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் மத்திய அரசு முகநூல் மற்றும் வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியதோடு எச்சரிக்கையும் விடுத்தது.


இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்ககர் பிரசாத்சமூக வலைத்தளங்களை பற்றி பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது, 


சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் யூடூப் மூலம் பல வதந்திகள் பரப்பட்டு வருகிறது. இந்த வதந்திகளை தடுக்க சமூக வலைத்தளம் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் 500-க்கு மேற்ப்பட்ட தவறான தகவல்கள் தற்போது நீக்கப்பட்டு உள்ளன. மேலும் வதந்தி மற்றும் தவறான தகவல்களை பரப்புவர்களை கண்காணிக்க அதிகாரிகள் குழு  நியமிக்கப்பட்டு உள்ளது. 


சமூக வலைத்தளங்கள் மூலம் தேசத்திற்கு விரோதமாகவும், எதிராகவும் தகவல்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ரவிசங்ககர் பிரசாத் கூறினார்.