உத்தராகண்ட்டில் கடும் பனிமூட்டம்!
உத்தராகண்ட்டில் கடும் பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்ட்டில் கடும் பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு காரணமாக வடமாநிலங்களில் மிகவும் மோசமான புகைமூட்டம் கடந்த ஒரு மாதமாக நிலவி வருகின்றது. தற்போது உத்தராகாண்டில் உள்ள உதம் சிங் நகரில் இன்று கடும் பனிமூட்டம் காரணமாக அப்பகுது முழுவதும் இரவு போன்று காட்சி அளித்தது.
போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்ப்பட்டு வருவதால் பள்ளிகள்,கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் செய்வதறியாது தடுமாறி வருகின்றனர்.மேலும், அங்கு கடும் குளிர் அலைகள் வீசி வருவதால். மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.