மும்பையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராட்டிர மானிலத்தில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழை தொடர்ந்து நேற்று 4-வது நாளாக நீடித்தது. இரவிலும், பகலிலும் நாள் முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. 


மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டி வரும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு உள்ளது. இந்த பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. சாலைகள், தெருக்களிலும் மழைவெள்ளம் தேங்கி உள்ளது.


விடாமல் பொழிந்து வரும் கனமழையால் நகர பகுதிகள் மற்றும் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.  வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.ரெயில் நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. மாட்டுங்கா, சயான், கல்வா, தானே, நாலச்சோப்ரா, பால்கர் ரெயில் நிலையங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கின.


இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் இன்று பொது விடுமுறை அறிவ்விக்கப்பட்டுள்ளது. மும்பையில் மேலும் 3 தினங்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.