மும்பையில் பலத்த மழை! மக்கள் வாழ்க்கை பாதிப்பு!
மும்பையில் பலத்த மழை பெய்து வருவதால் சாலைப் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மும்பையில் பலத்த மழை பெய்து வருவதால் சாலைப் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கனமழை காரணத்தால் மும்பை நகரின் தாழ்வான பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மும்பையில் உள்ள சியான் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கொட்டி வரும் மழையின் காரணத்தால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
மும்பையில் இன்று காலையிலும் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசாக துவங்கிய மழை 8 மணிக்கு மேல் கனமழையாக மாறியது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் இந்த கனமழையானது இன்று அதிகளவில் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் சில இடங்களில் 110 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
முன்னதாக இன்று அந்தேரி மேற்கு ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.