டெல்லி உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை நீல திமிங்கல சவால்களின் இணைப்புகளை ஏன் நீக்கவில்லை என பேஸ்புக், கூகுள் மற்றும் யாகூவிடம் பதில்களை கோரியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூடுதலாக, சென்டர் மற்றும் தில்லி போலீஸாரும் இந்த ஆன்லைன் விளையாட்டுகளின் இணைப்புகளை நீக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.


இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் குழந்தைகள் தற்கொலை செய்து கொண்ட ஆபத்தான ஆன்லைன் விளையாட்டு "நீல திமிங்கில சவால்களின்" இணைப்புகளை உடனடியாக அகற்றுவதற்கு கூகிள், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மைக்ரோசாப்ட் மற்றும் யாகூ இணையங்களில் முன்னதாக இந்த விளையாட்டின் இணைப்பு  இயக்கிவந்தது.


நீல திமிங்கல விளையாட்டு என்றால் என்ன?


ஆபத்தான நீல திமிங்கலம் விளையாட்டு அல்லது நீல திமிங்கிலம் சவால் என்பது ரஷ்யாவில் உருவானது. பங்கேற்கும் வீரர்கள் 50 கட்டளை பணிகளைத் தொடர்ச்சியாக செய்யவேண்டும், இறுதிகட்டமனது மரணத்தில் முடிவடையும். போட்டியின் பங்கேற்பாளர்கள், தாங்கள் பூர்த்தி செய்யப்பட்ட சவால்களின் புகைப்படங்களினை பகிர்ந்து கொள்ள வேண்டும்.


திகில் திரைப்படம் பார்த்தல், அசாதாரண மணி நேரங்களில் விழித்துகொள்ளுதல் போன்றவை இந்த கட்டளைகளுக்குள் அடங்கும்.


இந்த விளையாட்டு பல்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உயிர்களைக் பறித்துள்ளது. எனினும், மும்பை ஆந்தேரியில் நடந்த இந்த தற்கொலை இந்தியாவில் முதல் நிகழ்வு ஆகும்.