ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் 5 தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 609 சாலைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேச மாநிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு ஆகி வருகிறது. காலை நேர வெப்பநிலை மிக குறைவாக காணப்படுகிறது. குறிப்பாக காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் பனிப்பொழிவு அதிகளவில் உள்ளது.


குல்லு மாவட்டத்தில் சோலங்க் பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பனிப்பொழிவால் அங்குள்ள சாலைகள் பனியால் மூடப்பட்டன. வீடுகளின் கூரைகளும், சுற்றுப்புற பகுதிகளும் பனியால் சூழப்பட்டுள்ள நிலையில் மரம்,செடி, கொடிகள் மீது பனி படர்ந்துள்ளது. அதேசமயம் காணும் இடமெல்லாம் பனியால் போர்த்தப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.


இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் 5 தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 609 சாலைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன. 2031 மின்சார விநியோக திட்டங்கள் சீர்குலைந்து 118 நீர் வழங்கல் திட்டங்கள் தடைபட்டுள்ளன. 


 



 


 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.