இமாச்சலப்பிரதேசம்: பஸ் கவிழ்ந்த விபத்தில் 14 பலி, 25 பேர் காயம்
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டி மாவட்டத்தில் இன்று விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
சிம்லா: இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டி மாவட்டத்தில் இன்று விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
மலைப்பாங்கான பாதை வழியாக சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் உள்ள பெரிய பள்ளத்துக்குள் கவிழ்ந்து, உருண்டது.
இந்த விபத்தில் சுமார் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.