போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு  பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன், இன்ஸ்டாகிராமில் ஆறுதலாக ஒரு கடிதம் வெளியிட்டு உள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  என் அன்பான ஆரியன், வாழ்க்கை ஒரு விசித்திரமான பயணம். ஏனென்றால் அது நிச்சயமற்றது.  அது உனக்கு பல அனுபவங்களை கொடுக்கிறது.  ஆனால் கடவுள் மிகவும் அன்பானவர், வாழ்க்கையில் முன்னேரி வர அவர் கடினமான விஷயங்களை மட்டுமே கொடுக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிகப்பெரிய குழப்பங்களுக்கு மத்தியில் தான் நாம் அனைத்திற்கும் தயார் ஆகிவிட்டோமோ என்பது நமக்கு புரியும்.  அப்படி பட்ட சூழ்நிலை தற்போது உனக்கு வந்துள்ளது.  கோபம், குழப்பம், உதவ ஆளில்லாத நிலையில் தான் உனக்குள் இருக்கும் ஹீரோ வெளியில் வருவான்.  இது போன்ற கடினமான காலங்கள் தான் உன்னை வலிமையாக்கும்.  இந்த காலம் உன்னுள் இருக்கும் கருணை, அன்பு போன்றவற்றை அழித்துவிடும்.  அப்படி நடக்கவிடாமல் தடுத்துக்கொள்.  நான் உன்னை குழந்தையாவே பார்க்கிறேன்.  நான் உன்னுடன் இருக்கிறேன், தைரியாக இரு என கூறியுள்ளார்.


அதேபோல், ஷாருக்கானின் மகனுக்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்களான திரைப்பட தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா, நடிகர்கள் பூஜா பட் மற்றும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.  இதனிடையே போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஆர்யன் கானுக்கு ஹிரித்திக் ரோஷன் ஆதரவு தெரிவித்திருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டங்கள் தெரிவித்துள்ளனர்.  முன்னதாக, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 3 நாள் காவல் முடிந்த நிலையில் மும்பை நீதிமன்றத்தில் ஆர்யன்கானை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்  ஆஜர்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


 



ALSO READ ஆரியன் கானின் காவல் நீட்டிக்கப்படுமா; நீதிமன்றத்தில் NCB கோரிக்கை..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G