கொரோனா நோய்தொற்றில் இருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைந்தார்
கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட எனக்கு உதவிய மற்றும் எனக்கு சிகிச்சையளித்த மெடந்தா மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்: அமித் ஷா
புது டெல்லி: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, (Amit Shah) இன்று எடுக்கப்பட்ட சோதனையில் "நெகட்டிவ்" வந்ததாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் வீட்டில் தனிமையில் இருப்பார் என்று அமித் ஷா தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
"கொரோனா (Coronavirus) தொற்றுநோயை எதிர்த்துப் போராட எனக்கு உதவிய மற்றும் எனக்கு சிகிச்சையளித்த மெடந்தா மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்" என்று உள்துறை அமைச்சர் ட்வீட் (Tweet) செய்துள்ளார்.
ALSO READ | மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!!
ஆகஸ்ட் 2 ஆம் தேதி கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்தார் அமித் ஷா.
"கொரோனா வைரஸின் அறிகுறிகளைக் கண்டறிந்த பிறகு, நான் என்னை பரிசோதித்தேன், அதில் கொரோனா இருப்பது தெரியவந்தது. எனக்கு உடல்நிலை சரியில்லை, ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன்" என்று முன்னதாக அமித் ஷா ட்வீட் செய்திருந்தார்.
"கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள், அவர்களை தனிமைப்படுத்தி தங்களை சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறியிருந்தார்.