Coal Crisis: உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய கூட்டம்..!!!
தில்லி, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் மின் நெருக்கடி பிரச்சினையை சமாளிக்க மத்திய அரசிடம் உதவி கோரியுள்ளன.
புதுடெல்லி: நாட்டின் பல மாநிலங்கள் மின்சார நெருக்கடி தொடர்பாக மத்திய அரைசம் உதவி கோரியுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) தலைமையில் முக்கிய கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷி, எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மற்றும் மூத்த NTPC அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிலக்கரி இருப்பு மற்றும் தற்போதைய நிலவரம் பற்றிய விரிவான தகவல்களை, அதிகாரிகள் உள்துறை அமைச்சரிடம் தெரிவித்தனர்.
உள்துறை அமைச்சகம் கூட்டிய இந்த கூட்டத்தில், நிலக்கரி மற்றும் எரிசக்தி துறை அமைச்சர்கள் மின் உற்பத்தி தொடர்பான தகவல்கள் முதல் நிலக்கரி சுரங்கங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தனர்.
பல மாநிலங்களில் மின் நெருக்கடி!
தில்லி, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் மின் நெருக்கடி பிரச்சினையை சமாளிக்க மத்திய அரசிடம் உதவி கோரியுள்ளன. மேலும், மின்சாரத்தை சேமிக்குமாறு மாநில மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும், நாட்டில் போதுமான நிலக்கரி கையிருப்பு உள்ளது என்றும் மின் நெருக்கடி ஏற்படக்கூடிய சாத்தியம் இல்லை என்றும் மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது.
நிலக்கரி அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமையன்று, நாட்டில் மின் உற்பத்தி நிலையங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான நிலக்கரி இருப்பு உள்ளது என தெளிவாக கூறியது. நிலக்கரி பற்றாக்குறையால் மின் விநியோகத்தில் இடையூறு ஏற்படுவதற்கான வாய்ப்பை அமைச்சகம் முழுமையாக நிராகரித்துள்ளது. முன்னதாக, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி மின் நெருக்கடி பிரச்சினையை தீர்க்க உதவ வேண்டும் என கோரினார்.
ALSO READ | Amit Shah Interview: ஆட்சியில் நீடிப்பது குறிக்கோள் அல்ல – அமித் ஷா
நிலக்கரி தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு
நிலக்கரி அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மின் நிலையங்களில் சுமார் 72 லட்சம் டன் நிலக்கரி இருப்பு உள்ளது என்றும் இது நான்கு நாட்களுக்கு போதுமானது எனவும் தெளிவுபடுத்தியது. இந்தியாவில், நிலக்கரி 400 லட்சம் டன் இருப்பு உள்ளது, அவை மின் உற்பத்தி நிலையங்களுக்கு சப்ளை செய்யப்படுகின்றன. நாட்டில் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி இந்த ஆண்டு செப்டம்பர் வரை 24 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது எனவும் நிலக்கரி அமைச்சகம் கூறியுள்ளது.
ALSO READ | நிலக்கரி பற்றாக்குறை: இந்தியாவும் ‘இருளில்’ மூழ்குமா... மத்திய அரசு கூறுவது என்ன..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR