தூத்துக்குடி மக்கள் அமைதி திரும்ப ஒத்திழைப்பு தர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதைக்கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என அவர்களது உறவினர்கள் கோஷமிட்டனர். பின்னர் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையால் தமிழகமே போர்களமாக காட்சியளிகின்றது. 


இந்நிலையில், தூத்துக்குடி மக்கள் அமைதி திரும்ப ஒத்திழைப்பு தர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். 



இந்த சம்பவ விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.