ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்திலும் பனிக்காலம் தொடங்கியுள்ளது. பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவின் அளவு அதிகரித்துக் காணப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்ரீநகர், லே, லடாக் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதிகளில் கடும்பனிப்பொழிவு காணப்படுகிறது. லே பகுதியில் நேற்று இரவு மைனஸ் 9.7 டிகிரி செல்சியஸ் ஆக சீதோஷ்ணநிலை காணப்பட்டது.


பஞ்சால் என்ற இடத்தில் சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளன. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இருப்பினும், சில இடங்களில் பனிப்பொழிவை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து மகிழ்கின்றனர்.