லடாக்கின் பாங்காங் திசோ ஏரியின் தெற்கு பகுதியில் உயரமான பகுதிக்கு அருகில், சீனா, பல மேமிராக்கள் மற்றும் சென்சார்களை நிறுவி இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், சீன துருப்புகளின் சதியை முறியடித்தும் இந்தியா உயரமான பகுதியை தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்து விட்டது.


இந்தியா-சீனா எல்லை மோதலில், சீன மக்கள் விடுதலை இராணுவ துருப்புக்கள் கயிறுகள் மற்றும் பிற ஏறும் கருவிகளின் உதவியுடன் பங்கோங் த்சோவின் தென் கரையில், பிளாக் டாப் மற்றும் தாகுங் ஹைட்ஸ் இடையே ஒரு டேபிள்-டாப் பகுதியில் ஏறத் தொடங்கின. பங்கோங்கின் தாகுங் பகுதியில் குறைந்தது 500 சீன வீரர்கள் டாங்குகளுடன் கூடியிருந்தனர்.இந்திய ராணுவம் ஏற்கனவே தயாராக இருந்தது, இந்திய வீரர்களின் வலிமைக்கு முன் சீனா சரணடைய வேண்டியிருந்தது. சீனாவின் இந்த சதி முயற்சி, இந்திய துருப்புக்களால் முறியடிக்கப்பட்டதாக ராணுவம் திங்களன்று தெரிவித்துள்ளது.


இந்திய படைகளின் நடவடிக்கையை கண்காணித்து, இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்த சீன படையினர்,   பல இடங்களில் சென்சார்கள் மற்றும்  கேமிராக்களை நிறுவியிருந்ததாக, ராணுவ வட்டாரங்கள் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன.


இந்திய தரப்பு, உயரமான பகுதியை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்த உடன், அந்த கேமிராக்கள் மற்றும் சென்சார்கள் நீக்கப்பட்டன என்றும், இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.


ஜூன் மாதம் 15 ம் தேதி நடந்த கல்வான் மோதலுக்கு பிறகு, இந்திய ராணுவம் மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளது.


மேலும் படிக்க | லடாக்கில் வலுவான நிலையில் இந்தியா... Pangong Tso தெற்கு பகுதி ஏன் முக்கியமானது..!!!


தீவிர எச்சரிக்கை நிலையில் இருந்ததால், லடாக்கின் பாங்காங் ஏரியின், ராணுவ ரீதியாக மிக முக்கியமான தெற்கு பகுதியை ஆக்கிரமிக்க முயன்ற போது, அதனை முறியடித்து, இந்திய படை சீனாவை விரட்டியடித்தது.


கல்வான் மோதலில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் அதிகம் பேர் இறந்ததாக கூறபடும் நிலையில், அது குறித்து அதிகாரபூர்வ தகவல்களை இது வரை சீனா வெளியிடவில்லை.


மேலும் படிக்க | இந்திய சீன எல்லையில் பதற்றம், உயர் மட்ட கூட்டத்தை கூட்டியுள்ளார் பிரதமர் மோடி..!!!