பிரதமர் மோடியின் ஹுஸ்டன் நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி வரும் 22 ஆம் தேதி ஹுஸ்டனில் இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் மத்தியில் உரை நிகழ்த்த உள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள டிரம்ப் முடிவு செய்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தையின் போது இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் 50 ஆயிரம் பேர் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில், மோடியுடன் இணைந்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் மேடை ஏறுவார் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனக்கூறப்படுகிறது.


காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்க எம்.பி-க்கள் கவலை தெரிவித்துள்ள நிலையில், இந்த கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்பது, அவரது ஆதரவை மோடிக்கு அளிக்கும் வகையில், சமிஞ்சைகள் வெளிப்படுத்தும் எனக்கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க பயணத்தில், அதிபர் டிரம்ப்பை, பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு நியூயார்க் நகரம் அல்லது வாஷிங்டன்னில் நடக்கலாம் என தெரிகிறது. வரும் 28 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.